Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

ஹோர்முஸ் வழித்தடத்தில் டேங்கர் கப்பல்கள் செல்வதில் சிக்கல்

ஹோர்முஸ் வழித்தடத்தில் டேங்கர் கப்பல்கள் செல்வதில் சிக்கல்

ஈரான் கடல்சார் தாக்குதல்களைத் தீவிரப்படுத்தியுள்ள போதிலும், மத்திய கிழக்கிலிருந்து எண்ணெய் விநியோகம் போருக்கு முந்தைய அளவை நெருங்கியுள்ளது.

பகிரவும் WhatsApp Facebook

ஹோர்முஸ் நீரிணை வழியாகப் பாரசீக வளைகுடாவுக்குள் சென்று கச்சா எண்ணெய் ஏற்றிவர டேங்கர் கப்பல்களை அமர்த்துவதில் தொடர்ந்து சிக்கல் இருப்பதாக ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் (ஹெச்பிசிஎல்) தெரிவித்துள்ளது.

நீரிணையைக் கடக்கும் கப்பல்களின் எண்ணிக்கை அதிகரித்து, வளைகுடாவிலிருந்து கச்சா எண்ணெய் விநியோகம் உயர்ந்துள்ள நிலையிலும் இந்தச் சிக்கல் நீடிக்கிறது.
எண்ணெய் வாங்குவதற்குக் கிடைத்தாலும், சரக்கு ஏற்ற வேண்டிய தேதிக்கு ஏற்ற கப்பலைக் கண்டுபிடிப்பது கடினமாக இருப்பதாக நிறுவனத் தலைவர் விகாஸ் கௌஷல் தெரிவித்தார்.

சில நேரங்களில் ஒப்பந்தம் செய்யப்பட்ட பின்னரும், கப்பல் உரிமையாளர்கள் கடைசி நேரத்தில் பயணத்திலிருந்து விலகுவதாக அவர் கூறினார். ஹோர்முஸ் வழியாக எண்ணெய் கொண்டுவரும் முயற்சிகள் சில முறை வெற்றி பெற்றுள்ளன. நீரிணைக்கு வெளியேயும் சரக்குகளைப் பெற்றுக்கொள்ள முடிவதாகவும் தெரிவித்தார்.

ஈரான் கடல்சார் தாக்குதல்களைத் தீவிரப்படுத்தியுள்ள போதிலும், மத்திய கிழக்கிலிருந்து எண்ணெய் விநியோகம் போருக்கு முந்தைய அளவை நெருங்கியுள்ளது. அதே நேரத்தில், உலகளாவிய டேங்கர் பற்றாக்குறையால் கச்சா எண்ணெயைக் கப்பலில் எடுத்துச் செல்லும் செலவு கடுமையாக உயர்ந்துள்ளது. 

ஹோர்முஸ் வழியாகப் பயணிக்கச் சம்மதிக்கும் கப்பல் உரிமையாளர்கள் குறைவாக இருப்பதால், அங்கு சிக்கல் மேலும் அதிகரித்துள்ளது. இதனால் வளைகுடா உற்பத்தியாளர்கள் தங்களது சரக்குகளை நீரிணைக்கு வெளியே கொண்டுவந்து, அங்கு வாடிக்கையாளர்களின் கப்பல்களுக்கு மாற்றி வருகின்றனர்.

தரவு சேவை நிறுவனமான கெப்லர் கணக்குப்படி, 2025-ல் ஹெச்பிசிஎல் மத்திய கிழக்கிலிருந்து நாளொன்றுக்குச் சுமார் 2.40 லட்சம் பீப்பாய் எண்ணெய் வாங்கியது. போரால் ஹோர்முஸ் வழிப் போக்குவரத்து கிட்டத்தட்ட முடங்கிய ஏப்ரலில், அது 57,000 பீப்பாயாகச் சரிந்தது. வளைகுடாவிலிருந்து விநியோகம் மீண்டதால், அக்டோபரில் கொள்முதல் நாளொன்றுக்குச் சராசரியாக 2.56 லட்சம் பீப்பாயாக உயர்ந்தது.

மும்பையைத் தலைமையிடமாகக் கொண்ட ஹெச்பிசிஎல், வழக்கமாகத் தனது கொள்முதலில் பெரும்பகுதியைப் பாரசீக வளைகுடாவுக்குள்ளேயே கப்பல்களில் ஏற்றிக்கொள்ளும். அண்மையில் உடனடிச் சந்தையில் அதிகமாகக் கொள்முதல் செய்யத் தொடங்கியுள்ள நிறுவனம், தனது சுத்திகரிப்பு ஆலைகளிலேயே சரக்குகளை நேரடியாகப் பெற்றுக்கொள்வதாக கௌஷல் கடந்த மாதம் தெரிவித்தார்.

முந்தைய செய்தி
Why AI cannot think like humans: Key differences in intelligence
அடுத்த செய்தி
Tesla to cut Cybertruck output for Cybercab production

தொடர்புடைய செய்திகள்